ஆப்பிள் நிறுவனம் தனது 2021 ஐபேட் ப்ரோ உயர் ரக மாடல்களில் அதிவேக 5ஜி வசதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்
பதிவு: நவம்பர் 30, 2020 11:29
ஐபேட் ப்ரோ
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் 5ஜி எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் அதிவேக இணைய இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டது.
இதற்கென ஆப்பிள் சொந்தமாக எம்எம்வேவ் AiP (Antenna in Package) உருவாக்கி வருவதாகவும், இதனை ஐபோன் மட்டுமின்றி பல்வேறு இதர சாதனங்களிலும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த தொழில்நுட்பம் அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 12 யூனிட்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.
எனினும், அடுத்த ஆண்டு வாக்கில் இந்த தொழில்நுட்பம் பெருமளவு சாதனங்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. அதன்படி 2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்எம்வேவ் வசதி கொண்ட 5ஜி நெட்வொர்க் திறன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED ரக டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
Related Tags :