ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபேட் ப்ரோ மாடலில் முற்றிலும் புதிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ
பதிவு: நவம்பர் 24, 2020 11:19
ஐபேட்
2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் புதிய டிஸ்ப்ளே பேனல் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேனல்களை சாம்சங் உற்பத்தி செய்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தென் கொரியாவில் இயங்கி வரும் சாம்சங் உற்பத்தி ஆலைகளில் ஒன்றை 2021 ஐபேட் ப்ரோ மாடலுக்கான டிஸ்ப்ளே பேனல்களை உற்பத்தி செய்ய வசதியாக மாற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு OLED பேனல்களை உற்பத்தி செய்து வழங்கலாம் என தெரிகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபேட் ப்ரோ மாடல்களில் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த டிஸ்ப்ளே பேனல்கள் அதிக காண்டிராஸ்ட், மேம்பட்ட டைனமிக் ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டவை ஆகும்.
மேலும் இவை அதிகளவு பேட்டரியை சேமிக்கும் திறன் கொண்டவை ஆகும். தற்சமயம் ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்ப்ளே பேனல்களை வழங்கி வருகிறது. இதே தொழில்நுட்பம் ஐபேட் மற்றும் மேக் மாடல்களில் பயன்படுத்த அதிக செலவாகும் என தெரிகிறது.
அந்த வகையில் ஆப்பிள் தனது ஐபேட் மாடல்களில் OLED பேனல்களை கட்டாயம் வழங்குமா என்பது தற்சமயம் கேள்விக்குறியாகவே உள்ளது.
Related Tags :