தொழில்நுட்பம்
அமேஸ்பிட் நியோ

குறைந்த விலையில் அமேஸ்பிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Published On 2020-10-01 05:41 GMT   |   Update On 2020-10-01 05:41 GMT
அமேஸ்பிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


ஹூவாமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ரெட்ரோ ஸ்டைலிங், 1.2 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்டுள்ளது. 

இத்துடன் ஸ்மார்ட்வாட்ச் பேட்டரியை சேமிக்கும் வகையில் பிளாக் அண்ட் வைட் எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது நேரடி சூரிய வெளிச்சத்திலும் தெளிவாக பார்க்கும் வசதியை வழங்குகிறது. 



இத்துடன் லிப்ட்-டு-வேக் அம்சம், நான்கு பட்டன்கள் கொண்ட பிளாஸ்டிக் பாடி, 24 மணி நேர இதய துடிப்பை டிராக் செய்யும் வசதி, 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

அமேஸ்பிட் நியோ சிறப்பம்சங்கள்

- 1.2 இன்ச் எஸ்டிஎன் பிளாக் அண்ட் வைட் டிஸ்ப்ளே
- அழைப்புகள், குறுந்தகவல், மின்னஞ்சல் நோட்டிபிகேஷன் வசதி
- ஆக்டிவிட்டி டிராக்கிங் மற்றும் ஸ்லீப் மாணிட்டரிங் வசதி
- 3 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார்
- ப்ளூடூத் 5.0 எல்இ
- ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐஒஎஸ் 10
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 160 எம்ஏஹெச் பேட்டரி

அமேஸ்பிட் நியோ ஸ்மார்ட்வாட்ச் ரெட், பிளாக் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் மிந்த்ரா வலைதளங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Tags:    

Similar News