தொழில்நுட்பம்
விவோ முதல் ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு தேதி அறிவிப்பு
விவோ நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை விவோ வாட்ச் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது.
இதற்கான டீசர்களின்படி புதிய விவோ வாட்ச் வட்ட வடிவ டையல், இரண்டு பட்டன்கள் மற்றும் ஆடியோ பிளேபேக் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
இந்த வாட்ச் 42 எம்எம் / 46 எம்எம் என இருவித மாடல்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் வட்ட வடிவ AMOLED டையல், ஸ்டீல் பாடி ரப்பர் மற்றும் லெதர் ஸ்டிராப் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இத்துடன் 5 ஏடிஎம் தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.
இவைதவிர தொடர்ச்சியான இதய துடிப்பு சென்சார், ஜோவி வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் மைக்ரோபோன், என்எஃப்சி, பில்ட் இன் மெமரி அதிகபட்சம் 18 நாட்களுக்கான பேட்டரி லைஃப் கொண்டிருக்கும் என தெரிகிறது. விவோ வா்ச் மாடலில் விவோ ஒஎஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.