தொழில்நுட்பம்
ரியல்மி

விரைவில் மிகமெல்லிய சூப்பர் டார்ட் சார்ஜர்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டம்

Published On 2020-08-04 05:56 GMT   |   Update On 2020-08-04 05:56 GMT
ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் மிகமெல்லிய சூப்பர் டார்ட் சார்ஜர்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


ரியல்மி நிறுவனம் சமீபத்தில் 10 வாட் வயர்லெஸ் சார்ஜிங் பேட் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் ரியல்மி 50வாட் மற்றும் 65வாட் அல்ட்ரா தின் சூப்பர் டார்ட் சார்ஜர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சாதனம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது 4200 எம்ஏஹெச் பேட்டரியை 0 முதல் 20 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. 



ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் புதிய 65வாட் மற்றும் 50வாட் அல்ட்ரா தின் சூப்பர்டார்ட் சார்ஜர்களின் இந்திய வெளியீட்டை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதன்படி புதிய சார்ஜர் வழக்கமான சார்ஜர்களை விட அளவில் சிறியதாக இருக்கின்றன. 

மேலும் இது வழக்கமான 65 வாட் சார்ஜர்களை விட எடை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மியின் 50வாட் அல்ட்ரா தின் சூப்பர்டார்ட் சார்ஜர் பார்க்க ஒப்போவின் 50வாட் மின் சூப்பர்வூக் சார்ஜர் போன்றே காட்சி அளிக்கிறது. அந்த வகையில் இது ரீ-பிராண்டு செய்யப்பட்ட ஒப்போ சார்ஜர் ஆக இருக்கலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News