தொழில்நுட்பம்
சாம்சங்

ஊரடங்கால் வாட்ஸ்அப்பில் சேவை வழங்கும் சாம்சங்

Published On 2020-07-07 08:32 GMT   |   Update On 2020-07-07 08:32 GMT
சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் சேவை வழங்க துவங்கி இருக்கிறது.


சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர் சேவை மையத்தை வாட்ஸ்அப் செயலியில் வழங்க துவங்கி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு சாம்சங் சாதனங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு வீட்டில் இருந்தபடி விளக்கம் பெற முடியும்.

வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்வோருக்கு ரிமோட் சப்போர்ட், லைவ் சாட், சாம்சங் வலைதளம் அல்லது யூடியூபில் உள்ள விளக்க வீடியோக்கள் கொண்டு விளக்கம் மற்றும் சேவை மைய உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



சாம்சங் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் வாட்ஸ்அப் சப்போர்ட் நம்பர் – 1800-5-7267864 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

பின் எந்த சாம்சங் சாதனம் பற்றிய கேள்விகள், சர்வீஸ் சென்டர் முதவரி, சரி செய்ய கொடுத்த சாதனத்தின் நிலை, புதிய சலுகைகள் மற்றும் புதிய சாம்சங் சாதனங்களுக்கான டெமோ மற்றும் இன்ஸ்டாலேஷன் போன்ற சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Tags:    

Similar News