தொழில்நுட்பம்
நோக்கியா ஸ்மார்ட் டிவி

ஜூன் மாதம் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட் டிவி

Published On 2020-05-29 06:06 GMT   |   Update On 2020-05-29 06:06 GMT
நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகமமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



43 இன்ச் அளவில் புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியாவில் ஜூன் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் டீசர் நோக்கியா வலைதளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. 43 இன்ச் நோக்கியா டிவி மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுடன் விற்பனை செய்யப்படுகிறது.



நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது. இதன் வடிவமைப்பு கிட்டத்தட்ட 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதன் சிறப்பம்சங்களும் 55 இன்ச் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலில் குவாட்கோர் பிராசஸர், மாலி 450 MP GPU, 2.25 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு 12 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது.

தற்போதைய தகவல்களின் படி புதிய நோக்கியா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 34 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News