தொழில்நுட்பம்
ரெட்மி 1ஏ மாணிட்டர்

சீன சந்தையில் அறிமுகமான ரெட்மியின் முதல் மாணிட்டர்

Published On 2020-05-28 06:12 GMT   |   Update On 2020-05-28 06:12 GMT
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு சீன சந்தையில் தனது முதல் மாணிட்டர் மாடலை அறிமுகம் செய்தது.



சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி டிஸ்ப்ளே 1ஏ மாணிட்டரை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரெட்மி மாணிட்டரில் 3-மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு மற்றும் 7.3எம்எம் அளவில் மெல்லிய வடிவமைப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ரெட்மி 1ஏ மாணிட்டரில் புளூ லைட் வசதி மற்றும் கண்களை பாதுகாக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ரெட்மி மாணிட்டர் 178 டிகிரி வியூவிங் ஆங்கில் கொண்டிருக்கிறது. இதில் 23.8 இன்ச் 1920x1080 பிக்சல் ஐபிஎஸ் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இந்த மாணிட்டரின் பின்புறம் பவர் பட்டன், ஹெச்டிஎம்ஐ மற்றும் விஜிஏ போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதன் ஸ்டான்டு டெக்ஸ்ச்சர் ஃபினிச் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய ரெட்மி மாணிட்டர் விலை 599 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 6330 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரெட்மி மாணிட்டருக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News