தொழில்நுட்பம்
ஏர்டெல்

இருமடங்கு டேட்டா, கூடுதல் டாக்டைம் வழங்கும் ஏர்டெல்

Published On 2020-05-16 04:55 GMT   |   Update On 2020-05-16 04:55 GMT
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் கூடுதல் டாக்டைம் வழங்கப்படுகிறது.



ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 98 சலுகையில் இருமடங்கு டேட்டா வழங்குகிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு 12 ஜிபி அதிவேக டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற சலுகைகளை போன்று இதில் எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் பலன்கள் வழங்கப்படவில்லை.

இதுதவிர ரூ. 500, ரூ. 1000 மற்றும் ரூ. 5000 விலை ரீசார்ஜ் வவுச்சர்களில் ஏர்டெல் கூடுதல் டாக்டைம் வழங்குகிறது. முன்னதாக ரூ. 500 சலுகையில் ரூ. 423.73 டாக்டைம் வழங்கப்பட்ட நிலையில் தற்சமயம் ரூ. 480 டாக்டைம் வழங்கப்படுகிறது.



இதேபோன்று ரூ. 1000 சலுகையில் முந்தைய ரூ. 847.46 டாக்டைமிற்கு பதில் ரூ. 960 டாக்டைம் வழங்கப்படுகிறது. ரூ. 5000 சலுகையில் ரூ. 4237 டாக்டைம் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ. 4800 டாக்டைம் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ. 98 சலுகையில் இருமடங்கு டேட்டா ஜியோவின் ரூ. 101 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 101 விலை சலுகையில் 12 ஜிபி டேட்டா, ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் எண்களுக்கு 1000 நிமிடங்கள் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

ஜியோ சலுகையில் ஏர்டெல் போன்று வேலிடிட்டி கட்டுப்பாடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அந்த வகையில் ஜியோ ரூ. 101 வேலிடிட்டி ஜியோ எண் பேஸ் பேக் வேலிடிட்டி இருக்கும் வரை வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News