தொழில்நுட்பம்
ஜியோ ஃபைபர்

ஜியோ செட்-டாப்-பாக்சில் அனைவரும் அதிகம் எதிர்பார்த்த வசதி அறிமுகம்

Published On 2020-05-05 07:26 GMT   |   Update On 2020-05-05 07:26 GMT
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஃபைபர் செட் டாப் பாக்சில் அனைவரும் அதிகம் எதிர்பார்த்த வசதி வழங்கப்பட்டுள்ளது.



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோஃபைபர் செட் டாப் பாக்சில் அமேசான் பிரைம் வீடியோ செயலிக்கான வசதியை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜியோஃபைபர் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதில் அதிகளவு ஒடிடி செயலிகளுக்கான வசதி வழங்கப்படவில்லை.

மேலும் பிரபல ஒடிடி செயலிகளான அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கான வசதி வழங்கப்படாமல் இருந்தது. இதில் தற்சமயம் அமேசான் பிரைம் வீடியோவுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் இதில் நெட்ஃப்ளிக்ஸ் வசதி வழங்கப்படவில்லை.



ஜியோஃபைபர் ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் பயன்படுத்துவோர், செயலிகளுக்கான பட்டியலில் அமேசான் பிரைம் வீடியோ ஐகானை பார்க்க முடியும். பின் இதனை அவரவர் அமேசான் பிரைம் சந்தா கொண்டு செயலியை தொடர்ந்து பயன்படுத்த துவங்க முடியும். 

தற்சமயம் ஜியோஃபைபர் செட் டாப் பாக்சில் ஜீ5, ஆல்ட் பாலாஜி, சோனிலிவ், வூட், ஜியோ சினிமா, டிஸ்னி பிளஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஒடிடி செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜியோமீட் அறிவிக்கப்பட்டது. இந்த செயலி அந்நிறுவனத்தின் 2019-2020 நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியீட்டின் போது வெளியானது. புதிய செயலி ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற செயலிகளின் பட்டியலில் புதுவரவாக இணைய இருக்கிறது.
Tags:    

Similar News