தொழில்நுட்பம்
ஜியோமீட்

ஜியோமீட் - ரிலையன்ஸ் ஜியோவின் வீடியோ கான்பரன்சிங் செயலி

Published On 2020-05-02 05:31 GMT   |   Update On 2020-05-02 05:57 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் செயலி ஜியோமீட் எனும் பெயரில் உருவாகி இருக்கிறது.



வீடியோ கான்பரன்சிங் செயலிகளின் பயன்பாடு சமீப காலங்களில் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. உலகில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் இருந்தே பணியாற்றி வருவதால் இதுபோன்ற செயலிகள் சுமார் 6.2 கோடி டவுன்லோட்களை கடந்து இருக்கின்றன. 

ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் பல்வேறு வீடியோ கான்பரன்சிங் செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் புதுவரவு செயலயாக ஜியோமீட் விரைவில் இணைய இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய வீடியோ கான்பரன்சிங் செயலிக்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் 2019-2020 நான்காவது காலாண்டு முடிவுகள் வெளியீட்டின் போது வெளியானது.



ஜியோமீட் செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (ஒடிபி), மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது வீடியோ கான்பரன்சிங்கில் கெஸ்ட் ஆக இணைந்து கொள்ள முடியும். மேலும் ஒடிபி கொண்டு லாக்-இன் செய்வோரும் ஷேர் லிண்க் மூலம் மற்ற பயனர்களை கான்பரன்சில் இணைக்க அழைப்பு விடுக்க முடியும்.

இலவசமாக கிடைக்கும் ஜியோமீட் செயலியில் அதிகபட்சம் ஐந்து பேருடன் உரையாட முடியும். பிஸ்னஸ் பிளான் சந்தாவில் இருப்பவர்கள் அதிகபட்சமாக 100 பேருடன் வீடியோ கால் பேச முடியும். ஜியோமீட் செயலி குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கும் நெட்வொர்க் வேகத்திற்கு ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.

அழைப்பை ஒருங்கிணைப்பவர் அதில் கலந்து கொள்வோரின் ஆடியோ மற்றும் வீடியோ ஃபீட்களை இயக்க முடியும். மேலும் ஆடியோ / வீடியோ மோடில் இருந்தபடியே அழைப்புகளையும் பேச முடியும். 
Tags:    

Similar News