தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஆண்டு கணக்கில் பயனர் விவரங்களை கசியவிட்ட பிழை - விரைவில் சரி செய்வதாக ஆப்பிள் அறிவிப்பு

Published On 2020-04-23 06:39 GMT   |   Update On 2020-04-23 06:39 GMT
ஐஒஎஸ் மெயில் செயலியில் பயனர் விவரங்களை பல ஆண்டுகளாக கசியவிட்ட பிழையை விரைவில் சரி செய்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.



உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி ஐபோன் பயனர்களை பாதித்த பிழை ஒன்றை சரி செய்வதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பிழையை சான்ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த மொபைல் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் கண்டறிந்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் மட்டுமின்றி ஐபேட்களிலும் இந்த பிழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள மெயில் செயலியில் கண்டறியப்பட்டு இருக்கும் பிழையை ஏற்படுத்த ஹேக்கர்கள் ஆறு சைபர்செக்யூரிட்டி சோதனைகளை முறியடித்து இருப்பதாக ஆய்வு நிறுவன அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.



மெயில் செயலியில் உள்ள பிழை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பாதித்து இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் உலகளவில் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஐஒஎஸ் இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன்களில் இருந்தும் ஹேக்கர்கள் தகவல்களை திருட இந்த பிழை வழி வகுத்து இருக்கிறது. இந்த பிழை மெயில் செயலியை இயக்கி வந்த அனைத்து விவரங்களையும் ஹேக்கர்களுக்கு வழங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News