தொழில்நுட்பம்
ரெட்மி பேண்ட்

கலர் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. பிளக் கொண்ட ரெட்மி பேண்ட் அறிமுகம்

Published On 2020-04-04 05:45 GMT   |   Update On 2020-04-04 05:45 GMT
ரெட்மி பிராண்டின் புதிய ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கலர் டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. பிளக் இன்டகிரேஷன் வழங்கப்பட்டுள்ளது.



ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட் பேண்ட் கலர் டிஸ்ப்ளே, ஃபிட்னஸ் டிராக்கிங் வசதி, இதய துடிப்பு சென்சார், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. 

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் பேண்ட் 4 மற்றும் ஹானர் பேண்ட் 5ஐ போன்று புதிய ரெட்மி பேண்ட் சாதனத்திலும் யு.எஸ்.பி. பிளக் மூலம் மிக எளிமையாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டையல் ஃபேஸ் ஆப்ஷன்கள், நான்கு ரிஸ்ட்பேண்ட் வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன.

முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ரெட்மி பேண்ட் விரைவில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இதன் இந்திய வெளியீட்டு தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.



புதிய ரெட்மி பேண்ட் 1.08 அங்குல கலர் டிஸ்ப்ளே, ஐந்து ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரெட்மி பேண்டில் 70-க்கும் அதிகமான பிரத்யேக டையல் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் நான்கு வித ரிஸ்ட்பேண்ட் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.

யு.எஸ்.பி. கனெக்டர் கொண்டிருக்கும் ரெட்மி பேண்ட் பில்ட் இன் பேட்டரி மூலம் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்கும். ஆண்ட்ராய்டு கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருப்பதால், ரெட்மி மற்றும் எம்.ஐ. தவிர மற்ற மாடல்களிலும் பயன்படுத்த முடியும்.

புதிய ரெட்மி பேண்ட் விலை CNY 99 (இந்திய மதிப்பில் ரூ. 1100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News