தொழில்நுட்பம்
ஆப்பிள்

அந்த இயங்குதளத்தில் இந்த பிரச்சினை இருக்கிறது - அப்பட்டமாக ஒப்பு கொண்ட ஆப்பிள்

Published On 2020-03-24 06:42 GMT   |   Update On 2020-03-24 06:42 GMT
அந்த இயங்குதளத்தில் இந்த பிரச்சினை இருப்பதை ஆப்பிள் நிறுவனம் அப்பட்டமாக ஒப்பு கொண்டு இருக்கிறது.



ஐஒஎஸ் 13 மற்றும் ஐபேட் ஒஎஸ் 13 இயங்குதளங்களில் உள்ள பெர்சனல் ஹாட்ஸ்பாட் அம்சத்தில் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இணைப்பு கோளாறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி ஆப்பிள் சர்வீஸ் மையங்களை நாடுவர் என ஆப்பிள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

தற்காலிகமாக பெர்சனல் ஹாட்ஸ்பாட் அம்சத்தை ஆஃப் செய்து பின் மீண்டும் ஆன் செய்ய ஆப்பிள் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



புதிய கோளாறினை ஆப்பிள் நிறுவனம் மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஐஒஎஸ் 13.4 பதிப்பில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய செய்தி குறிப்புகளில் பெர்சனல் ஹாட்ஸ்பாட் சரி செய்யப்பட்டுள்ளதாக எவ்வித தகவலும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சினை ஹார்டுவேர் சார்ந்தது இல்லை என்றும் பயனர்கள் தங்களது சாதனங்களை அப்டேட் செய்து கொள்ள வலியுறுத்தி இருக்கிறது. இதுவரை புதிய மென்பொருள் கோளாறு சரி செய்வது பற்றி எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News