தொழில்நுட்பம்
பிரீமியம் விலையில் வாட்டர் ப்ரூஃப் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்
ஜாப்ரா நிறுவனம் பிரீமியம் விலையில் புதிய வாட்டர் ப்ரூஃப் வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது.
ஜாப்ரா நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி என அழைக்கப்படுகிறது. IP57 தரச்சான்று பெற்ற வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டிருக்கும் ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி இரண்டு வருட வாரண்டியுடன் வருகிறது.
புதிய இயர்போன்கள் 22 சதவீதம் சிறியதாக இருக்கிறது. இது காதுகளில் கச்சிதமாக பொருந்துகிறது. இது முந்தைய மாடலான ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 65டி மாடலை விட கூடுதலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் பயன்படுத்தும் போது இது 28 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி இயர்பட்ஸ்-ஐ ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், தொடர்ச்சியாக 7.5 மணி நேரங்களுக்கு பயன்படுத்த முடியும். இன் இயர் வடிவமைப்பு கொண்டிருப்பதால், இதில் பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷன் வசதி இருக்கிறது. மேலும் வெளிப்புற சத்தத்தை பயனர் விரும்பும் போது கேட்டுக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜாப்ரா நிறுவனம் மைகண்ட்ரோல்ஸ் எனும் மென்பொருள் அப்டேட் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை கொண்டு இயர்பட்ஸ் வலது மற்றும் இடதுபுற கண்ட்ரோல்களை பயனர் விரும்பும் வகையில் செட் செய்து கொள்ளலாம்.
ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி சிறப்பம்சங்கள்
- காம்பேக்ட் இயர்பட்ஸ் - காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வடிவமைப்பு
- ஜாப்ரா மைசவுண்ட் (இரண்டாவது காலாண்டில் அப்டேட் வழங்கப்படுகிறது)
- ஜாப்ரா மைகண்ட்ரோல்ஸ் (இரண்டாவது காலாண்டில் அப்டேட் வழங்கப்படுகிறது)
- தொடர்ச்சியாக 7.5 மணி நேரங்களுக்கு பேக்கப் வழங்குகிறது
- சார்ஜிங் கேஸ் உள்பட 28 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்
- நான்கு மைக்ரோபோன் தொழில்நுட்பம்
- யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங்
- ரிலையபிள் ட்ரூ வயர்லெஸ் கனெக்டிவிட்டி
- IP57 தரச்சான்று பெற்ற டியூரபிலிட்டி மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
புதிய ஜாப்ரா எலைட் ஆக்டிவ் 75டி இயர்பட்ஸ் டைட்டானியம் பிளாக், கிரே, சியெனா மற்றும் மின்ட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 11-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது.