தொழில்நுட்பம்
ஹார்மனோ ஸ்போர்ட்டோ

பட்ஜெட் விலையில் வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-02-07 15:05 IST   |   Update On 2020-02-07 15:05:00 IST
ஹார்மனோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



ஆடியோ சாதனங்களை உருவாக்கி வரும் ஹார்மனோ நிறுவனம் இந்தியாவில் ஸ்போர்டோ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. நெக்பேண்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய இயர்போனில் ப்ளூடூத் 5.0, சிறப்பான பேட்டரி பேக்கப், தரமான ஆடியோ ரெசல்யூஷன் வழங்குகிறது.

22 கிராம் எடை கொண்டிருக்கும் ஹார்மனோ ஸ்போர்ட்டோ இயர்போனில் காந்த சக்தி கொண்ட இயர் கப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் மற்றும் A2DP AVRCP வசதி கொண்டிருக்கிறது. 10 மீட்டர் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும் ஸ்போர்ட்டோ இயர்போனின் அம்சங்களை இயக்க பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



பில்ட் இன் மைக்ரோபோன் வசதி கொண்டிருப்பதால், அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. ஹார்மனோவின் உயர்ரக சி.வி.சி. நாய்ஸ் ரிடக்‌ஷன் தொழில்நுட்பம் இருப்பதால், சுற்றுப்புற சத்தங்களின் இடையூறின்றி ஆடியோவை அனுபவிக்கலாம். 180 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருப்பதால் 16 மணி நேரத்திற்கும் அதிக பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.

புதிய ஹார்மனோ ஸ்போர்ட்டோ இயர்போனினை முழுமையாக சார்ஜ் செய்ய 1.5 மணி நேரம் ஆகும். ஹார்மனோ ஸ்போர்ட்டோ வயர்லெஸ் இயர்போன் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Similar News