தொழில்நுட்பம்
விரைவில் அறிமுகமாகும் ரியல்மி வயர்லெஸ் சார்ஜர்
கியூ-ஐ சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜர் ஒன்றை ரியல்மி பிராண்டு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியல்மி பிராண்டு விரைவில் கியூ.ஐ. சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியல்மி பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்த போதே அந்நிறுவனம் வயர்லெஸ் சார்ஜர் சாதனத்திற்கான டீசரை வெளியிட்டிருந்தது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர் விற்பனை விரைவில் துவங்கும் என்றும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வயர்லெஸ் பவர் கன்சோர்டியம் வலைதளத்தில் ரியல்மி வயர்லெஸ் சார்ஜர் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வயர்லெஸ் சார்ஜர் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது. புதிய வயர்லெஸ் சார்ஜர் ரியல்மி அல்லாத மற்ற நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களிலும் இயங்கும் என கூறப்படுகிறது.
ரியல்மி பிராண்டு இதுவரை வெளியிட்டிருக்கும் சாதனங்களில் ரியல்மி பட்ஸ் ஏர் மட்டுமே வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. விரைவில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போனினை ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கிறது. வலைதளத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் ரியல்மி வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் 5வாட் வரையிலான திறன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
பெரும்பாலான கியூ.ஐ. லயர்லெஸ் சார்ஜகளில் 10 வாட் வரையிலான திறன் வழங்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் அதிக பிரபலமாகி வரும் நிலையில், 10 வாட் திறன் குறைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.