தொழில்நுட்பம்
ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்

விரைவில் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்

Published On 2020-01-28 11:24 GMT   |   Update On 2020-01-28 11:58 GMT
சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் இந்திய சந்தையி்ல் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.



சியோமியின் ரெட்மி பிராண்டு புதிதாக ரவுட்டர்கள், பவர் பேங்க் போன்ற சாதனங்களை சீன சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் சீனாவை தொடர்ந்து இந்தியாவில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய ரெட்மி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

முன்னதாக ரெட்மி பிராண்டு லேப்டாப் மாடல்களின் விவரங்கள் இணையத்தில் வெளியான நிலையில், ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடல் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது.

புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் HMSH01GE எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. பி.ஐ.எஸ். சான்று பெற்று இருப்பதால், இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை.



எனினும், இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் வியர் ஒ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் இதில் ஸ்னாப்டிராகன் வியர் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

முன்னதாக வெளியான சியோமி Mi வாட்ச் மாடலில் 1.78 இன்ச் AMOLED தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ் வடிவமைப்புகள், குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 3100 மற்றும் 1 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் MIUI சார்ந்த வியர் ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

இதை கொண்டு 40 செயலிகளை பயன்படுத்தும் வசதி மற்றும் இசம், 4ஜி வோல்ட்இ காலிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 36 மணி நேர பேக்கப் வழங்குகிறது.
Tags:    

Similar News