தொழில்நுட்பம்
பி.எஸ்.என்.எல்.

தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல்.

Published On 2020-01-25 09:17 GMT   |   Update On 2020-01-25 09:17 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பிரீபெயிட் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71-வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய சலுகை ஜனவரி 26-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பி.எஸ்.என்.எல். ரூ. 1999 விலை சலுகையில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. இந்நிலையில், புதிய அறிவிப்பின் படி இதன் வேலிடிட்டி 436 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 



பலன்களை பொருத்தவரை பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரிங் பேக் டோனில் பயனர் விரும்பும் பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என தெரிகிறது.

பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகை 2018-ம் ஆண்டில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா வழங்கப்பட்டது. பின் கடந்த ஆண்டு தினசரி டேட்டா அளவில் மாற்றம் செய்யப்பட்டு, தினமும் ஒரு ஜி.பி. டேட்டா கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News