தொழில்நுட்பம்

ராணுவ தர பாதுகாப்புடன் எல்.ஜி. ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-02-12 09:29 GMT   |   Update On 2019-02-12 09:29 GMT
எல்.ஜி. நிறுவனத்தின் கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் ராணுவ தர பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #LG #Smartphone



எல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கியூ9 ஒன் என அழைக்கப்படுகிறது. இதில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜி.பி. ரேம், IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

எல்.ஜி. நிறுவனம் சமீபத்தில் தனது கியூ9 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஜி7 ஒன் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகமானது. எல்.ஜி. ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



எல்.ஜி. கியூ9 ஒன் சிறப்பம்சங்கள்

- 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9
- கைரேகை சென்சார்
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- MIL-STD 810G சான்று
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

எல்.ஜி. கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் மொராக்கன் புளு நிறத்தில் கிடைக்கிறது. கொரியாவில் இதன் விலை 599,500 கொரியன் வொன் (இந்திய மதிப்பில் ரூ.37,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News