தொழில்நுட்பம்

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜி.பி. டேட்டா ஒரு வருட வேலிடிட்டி கொண்ட வோடபோனின் புதிய சலுகை

Published On 2019-01-31 04:33 GMT   |   Update On 2019-01-31 04:33 GMT
வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #Vodafone #offers



ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைந்தபின் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் வோடபோன் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வரிசையில் வோடபோன் நிறுவனம் அதன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,699 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஒரு வருட வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் டேட்டா பலன்கள் கிடைக்கும். ஒரு வருட வேலிடிட்டி என்பதால் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மற்ற அன்லிமிட்டெட் சலுகைகளை போன்றே ரூ.1,699 சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடுகளின்றி வழங்கப்படுகிறது.



இதுதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 1 ஜி.பி. 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் குறைக்கப்படும். இத்துடன் வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நேரலையில் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம்.

வோடபோனின் புதிய சலுகை ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,699 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ.1,699 சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

ஒருவருட சலுகை தவிர வோடபோன் மூன்று புதிய டாப்-அப் ரீசார்ஜ்களை அறிவித்தது. ரூ.50 விலையில் அறிவிக்கப்பட்ட முதல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39.7 டாக்டைம் வழங்கப்படுகிறது. மற்ற இருசலுகைகள் ரூ.100 மற்றும் ரூ.500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த இரு சலுகைகளிலும் முழுமையான டாக்டைம் வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.154 பிரீபெயிட் சலுகையில் ஆறு மாதங்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. #Vodafone #offers
Tags:    

Similar News