தொழில்நுட்பம்

டிசம்பர் 5ல் அறிமுகமாகும் புது நோக்கியா போன்கள்

Published On 2018-11-16 05:19 GMT   |   Update On 2018-11-16 05:19 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5ம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. #NokiaMobile



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5ம் தேதி புது நோக்கியா மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. துபாய் நாட்டில் நடைபெற இருக்கும் #expectmore விழாவில் புது நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இவ்விழாவில் அந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட நோக்கியா 9, நோக்கியா 8, நோக்கியா 8 சிரோக்கோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களும், ஹெச்.எம்.டி. குளோபல் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்த நோக்கியா X7 ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் நோக்கியா 2.1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த ஐந்து கேமரா லென்ஸ் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் மாடலும் இவ்விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

நோக்கியா 9 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 3D தொழில்நுட்பத்தில் இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதி அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம். இத்துடன் 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

நோக்கியா 9 போன்றே நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விவரங்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.



நோக்கியா 8.1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, 18.7:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, f/1.8, 1.4μm, OIS
- 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ ரெக்கார்டிங்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
Tags:    

Similar News