தொழில்நுட்பம்

சுவற்றில் தொங்க விடலாம், சுருட்டி வைத்துக் கொள்ளலாம் - விரைவில் அறிமுகமாகும் எல்.ஜி.யின் அதிநவீன டி.வி.

Published On 2018-11-02 09:53 GMT   |   Update On 2018-11-02 09:53 GMT
2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதி கொண்ட புதிய டி.வி.யை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #CES2019



2019ம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா துவங்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இவ்விழாவில் எதிர்பார்க்கப்படும் சாதஎனங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் எல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கூடிய வசதி கொண்ட OLED டி.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய டி.வி. பார்க்க இதுவரை வெளியான எல்.ஜி. டிஸ்ப்ளே ப்ரோடோடைப்களை போன்றே காட்சியளிக்கிறது.

மேலும் புதிய தொழில்நுட்பம் உண்மையான சாதனம் போன்றே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மடிக்கக்கூடிய மொபைல் போன் ஒன்றையும் எல்.ஜி. அறிமுகம் செய்யலாம் என பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் தெரிவித்து இருந்தார்.

சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், முதலில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியிடும் நிறுவனம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டுகளை போன்றே எல்.ஜி. நிறுவனம் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News