தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் நாட்ச் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-10-09 10:27 GMT   |   Update On 2018-10-09 10:27 GMT
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐவூமி இந்தியாவில் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #smartphone



சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐவூமி இந்தியாவில் இசட்1 எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் ஐவூமி இசட்1 மாடலில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் இசட்1 ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. 5.67 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1498 ஃபுல் வியூ நாட்ச் டிஸ்ப்ளே, குவாட்-கோர் மீடியாடெக் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.



ஐவூமி இசட்1 சிறப்பம்சங்கள்:

- 5.67 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1498 ஃபுல் வியூ டிஸ்ப்ளே
- குவாட்-கோர் மீடியாடெக் MT6739W பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஸ்மார்ட் எம்.இ. ஓ.எஸ். 3.0
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX135 சென்சார், 5P லென்ஸ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.12 மைக்ரான் பிக்சல், 4P லென்ஸ்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
- 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஐவூமி இசட்1 ஸ்மார்ட்போன் கிளாசிக் பிளாக், ஓசன் புளு மற்றும் பிளாட்டினம் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 11-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. துவக்க கால சலுகையாக பிளிப்கார்ட் தளத்தில் ஐவூமி இசட்1 ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஐவூமி இசட்1 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக், மாத தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ சார்பில் ரூ.2,200 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. #iVoomiZ1 #smartphone
Tags:    

Similar News