தொழில்நுட்பம்

நொடிகளில் விற்றுத்தீர்ந்த மோட்டோ ஸ்மார்ட்போன்

Published On 2018-10-06 06:31 GMT   |   Update On 2018-10-06 06:31 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஒன் பவர் ஸ்மார்ட்போன் முதல் ஃபிளாஷ் விற்பனை நொடிகளில் நிறைவுற்றது. #motorolaone #smartphone



சியோமி, ஹூவாய், ஒப்போ மற்றும் விவோ போன்ற சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் மோட்டோ ஸ்மார்ட்போன் விற்பனை சமீப மாதங்களில் குறைந்திருந்தது. எனினும், மோட்டோரோலா ஒன் பவர் மூலம் அந்நிறுவனம் மீண்டும் வெற்றிப்பாதையில் நுழைந்துள்ளது. 

மோட்டோரோலாவின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோரோலா ஒன் பவர் முதல் ஃபிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கிய சில நொடிகளில் நிறைவுற்றது. இதைத் தொடர்ந்து மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



மோட்டோ ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 11 அதிகாலை 12.01 மணி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலாவின் முதல் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, முன்பக்கம் 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12μm பிக்சல்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.0μm பிக்சல், 4K வீடியோ
- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25μm பிக்சல்
- கைரேகை சென்சார்
- P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இதில் மோட்டோரோலா அனுபவங்களை வழங்கும் சில அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News