தொழில்நுட்பம்

அக்டோபர் 4-இல் ஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை

Published On 2018-09-28 10:57 GMT   |   Update On 2018-09-28 10:57 GMT
இந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை அக்டோபர் 4-இல் நடைபெற இருக்கிறது. #jiophone2



ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி நடைபெற்றது.

ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை அக்டோபர் 4-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தியாவில் ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலைககளில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,500 செலுத்தி ஜியோபோன் வாங்கியதும் மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கியதும் முன்பணத்தை திரும்ப பெறலாம். புதிய ஜியோபோன் 2 வாங்குவோருக்கு இதுவரை இதுபோன்ற சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.



ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

- 2.4 இன்ச்,320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
- டூயல் கோர் பிராசஸர்
- 512 எம்பி ரேம்
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 2 எம்பி பிரைமரி கேமரா
- 0.3 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
- 2000 எம்ஏஹெச் பேட்டரி

சமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் செயலி பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone2 #reliancejio
Tags:    

Similar News