தொழில்நுட்பம்

ஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் இவ்வளவு தானா?

Published On 2018-09-26 10:18 GMT   |   Update On 2018-09-26 10:18 GMT
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #iPhoneXSMax



ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS சீரிஸ் சுவாரஸ்ய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி இருக்கும் ஐபோன் XS மாடல்களில் உள்ள உதிரிபாகங்கள் முதல் அதில் ஆப்பிள் வழங்கி இருக்கும் சிறப்பம்சங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது போன்ற பல்வேறு விவரங்களை ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் கூர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

பலகட்ட சோதனைகளை ஐபோன் XS தினந்தோரும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள உதிரி பாகங்களை ஆய்வு செய்யும் வீடியோக்கள் யூடியூபில் வெளியாகி வருகின்றன. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றின் மூலம் ஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் சார்ந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் ஐரோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டணம் சுமார் 443 டாலர்கள் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் X (64 ஜிபி) வேரியன்ட் உற்பத்தி கட்டணத்தை விட வெறும் 50 டாலர்கள் மட்டுமே அதிகம் ஆகும்.

ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மாடலின் விலை உயர்ந்த பாகமாக 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே பேனல் இருக்கிறது. இது ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை விட பெரிதாகும். இதைத் தொடர்ந்து ஏ12 சிப் விலை 72 டாலர்கள் அளவில் புதிய ஐபோனின் இரண்டாவது விலை உயர்ந்த பாகமாக இருக்கிறது.

மூன்றாவதாக ஃபிளாஷ் ஸ்டோரேஜ் பாகத்திற்கு ஆப்பிள் 64 டாலர்களை செலவிடுவதாக கூறப்படுகிறது. இவற்றுடன் கேமராக்களுக்கு 44 டாலர்கள் மற்றும் இதர பாகங்களுக்கு 55 டாலர்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஐபோன் X மாடலை விட பெரியது என்பதால், இதன் கட்டமைப்பு கட்டணமும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News