தொழில்நுட்பம்
கோப்பு படம்

ஃபேஸ்புக் 'போர்டல்' ஸ்மார்ட் ஸ்பீக்கர் வெளியீட்டு விவரம்

Published On 2018-09-22 06:36 GMT   |   Update On 2018-09-22 06:36 GMT
ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #socialmedia



ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனம் அமேசான் எக்கோ போன்றே வேலை செய்யும். 

இருவித அளவுகளில் உருவாகி இருக்கும் ஃபேஸ்புக் போர்டல் சேவை முன்னதாக மே மாதத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது, எனினும் நம்பிக்கையில்லா காரணத்தால் தாமதமானதாக கூறப்படுகிறது.

பயன்படுத்தாத போது கேமரா லென்சை மறைக்க ஷட்டர் ஒன்றும் இந்த சாதனத்தில் வழங்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஃபிரேமில் உள்ளவர்களை கண்டறிந்து பின் அவர்கள் அறையினுள் எங்கு சென்றாலும் பின்தொடரும். ஃபேஸ்புக் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து புதிய ஷட்டர் ஆப்ஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.


கோப்பு படம்

அமேசான் அலெக்சா வாய்ஸ் இன்டகிரேஷன் வசதியுடன் வரும் போர்டல் சாதனத்தில் பயனர்கள் இசையை அனுபவிப்பதோடு, வீடியோக்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடியும்.

ஃபேஸ்புக் நிறுவனம் இந்த சாதனத்தை தனது ஊழியர்களை வைத்து சில மாதங்களாக சோதனை செய்து வந்தது. பின் இந்த சாதனம் சில விற்பனையாளர்களிடமும் காண்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

இரண்டு வேரியன்ட்களில் உருவாகி இருக்கும் போர்டல் சாதனத்தின் விலை 400 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.28,894) மற்றொரு மாடல் 300 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,670) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News