தொழில்நுட்பம்

நான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் - வெளியீட்டு விவரங்கள்

Published On 2018-09-14 12:15 GMT   |   Update On 2018-09-14 12:15 GMT
சாம்சங் நிறுவனத்தின் அக்டோபர் 11 கேலக்ஸி விழாவில் நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #smartphone



சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி சாதனம் அக்டோபர் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

இதற்கென சாம்சங் வெளியிட்டிருக்கும் டீசரில் "4X fun" என்ற வார்த்தை மற்றும் தேதி இடம்பெற்றிருக்கிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவன வரலாற்றில் முதல் முறையாக நான்கு பிரைமரி கேமராக்கள் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஏற்கனவே டூயல் முன்பக்கம் மற்றும் பிரைமரி கேமராக்கள் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருந்தன. அதன்படி சமீபத்தில் வெளியான தகவல்களில் 2019 ஆண்டில் வெளியாக இருக்கும் கேலக்ஸி ஏ மாடலில் நான்கு கேமரா யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

கேலக்ஸி ஏ மாடலில் வழங்கப்பட இருக்கும் மூன்று கேமரா யூனிட்களில் ஒன்று 32 எம்.பி. சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி எஸ்10 மாடலில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News