தொழில்நுட்பம்

2018 ஐபோன், ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளன

Published On 2018-08-31 11:21 IST   |   Update On 2018-08-31 11:21:00 IST
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2018 ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #iPhoneXS #AppleWatch



ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. 

இம்முறை 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED ஸ்கிரீன் கொண்ட ஐபோன்களின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. இவை ஐபோன் XS என அழைக்கப்படலாம் என்றும் இவை புதிதாக தங்க நிற ஆப்ஷன் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி அனைத்து ஐபோன் மாடல்களிலும் நாட்ச், ஃபேஸ் ஐடி சார்ந்த ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புதிய ஏ12 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.



புதிய ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய வாட்ச் மாடல்களில் பெரிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது முந்தைய வாட்ச் சீரிஸ் 3 மாடல்களை விட 15% பெரியதாகவும், டிஸ்ப்ளேவை சுற்றி மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் அதிக விவரங்களை கொண்ட புதிய ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அனலாக் ஃபேஸ் நேரத்தை சுற்றி மொத்தம் எட்டு விவரங்களை காண்பிக்கும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் சைடு பட்டன் மற்றும் டிஜிட்டர் கிரவுன் இடையே புதிய ஓட்டை காணப்படுகிறது. இது பெரும்பாலும் இரண்டாவது மைக்ரோபோனாக இருக்கும் என கூறப்படுகிறது.



இத்துடன் புதிய டிஜிட்டல் கிரவுன் மற்றும் சைடு பட்டன் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 சார்ந்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி விடும்.

செப்டம்பர் 12 ஆப்பிள் விழாவில் மூன்று புதிய ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச் 4, ஆப்பிள் ஏர்பவர், ஏர்பாட்ஸ் 2 உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneXS #AppleWatch

புகைப்படம் நன்றி: 9to5mac
Tags:    

Similar News