தொழில்நுட்பம்

போல்ட் வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-08-11 09:26 GMT   |   Update On 2018-08-11 09:26 GMT
போல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #headphones


போல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஹெட்பேன்ட் மற்றும் இயர்கப்களில் ஸ்வெட்-ப்ரூஃப் செய்யப்பட்டு ப்ரோட்டீன் லெதர் மூலம் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இவை 2 வெவ்வேறு நிலைகளில் மடங்கும் என போல்ட் தெரிவித்துள்ளது.

இத்துடன் ஹெட்போன்களில் இன்-லைன் கன்ட்ரோல்கள் இருப்பதால், மியூசிக், வால்யூம் கன்ட்ரோல், மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும். டூயல் மோட் வசதியில் இயங்குகிறது. இதனால் சார்ஜ் குறைவாக இருக்கும் போது ஆக்சிலரி கேபிள் கொண்டு பயன்படுத்த முடியும். 

போல்ட் கியூ ஹெட்போன் ஐ.ஓ.எஸ்., ஆன்ட்ராய்டு மற்றும் பிளாக்பெரி இயங்குதளங்களில் வேலை செய்யும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் ஸ்டான்ட்-பை மற்றும் 8 முதல் 10 மணி நேர பிளேபேக் வழங்கும் என போல்ட் தெரிவித்துள்ளது. வயர்லெஸ் ஹெட்போனில் உள்ள ப்ளூடூத் ஆடியோ டீகோட் தொழில்நுட்பம் சிறப்பான ஆடியோ டிரான்ஸ்மிஷன் செய்கிறது.

புதிய போல்ட் கியூ ஹெட்போனில் CSR 8635 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.டி. தரத்தில் ஆடியோ வழங்குவதோடு 3D அகௌஸ்டிக் டிரைவர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்-லைன் கன்ட்ரோல்கள் மற்றும் பில்ட்-இன் மைக்ரோபோன் கொண்டு இசையை கேட்பதோடு, அழைப்புகளையும் ஏற்க முடியும்.

இதனுடன் அடிக்கடி சிக்கிக் கொள்ளாத வகையிலான கேபிள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போல்ட் கியூ ஹெட்போன் விலை ரூ.1,710 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மிந்த்ரா தளத்தில் ரூ.1,449 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #headphones #Wireless
Tags:    

Similar News