அறிந்து கொள்ளுங்கள்

பணம் கொடுத்தால் ட்விட்டர் புளூ டிக் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2022-11-02 05:09 GMT   |   Update On 2022-11-02 05:09 GMT
  • ட்விட்டர் தளத்தில் புளூ டிக் பெற விரும்புவோர் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
  • ட்விட்டர் புளூ சேவைக்கான கட்டண விவரங்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் தளத்தில் ஏற்கனவே உள்ள ட்விட்டர் புளூ சந்தா முறைக்கு கட்டணம் செலுத்துவதால் கிடைக்கும் பலன்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். அதன்படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கு கொடுக்கும் கட்டணத்தில் "புளூ டிக்" வெரிபிகேஷன் பேட்ஜ் வழங்கப்படுகிறது. வெரிபிகேஷன் வழங்க ஒவ்வொரு மாதமும் 20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. எனினும், தற்போது இந்த கட்டணம் 8 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 660 ஆகும்.

ட்விட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தும் போது ட்விட்டர் பயனர்களுக்கு புளூ டிக் உள்பட நான்கு பலன்கள் கிடைக்கும். ட்விட்டரில் வருவாய் ஈட்டும் முறையில் விளம்பரதாரர்களை மட்டும் சார்ந்திருக்க முடியாது. ட்விட்டரில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை மோசமானது, கட்டணம் ஒவ்வொரு நாடுக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

புளூ டிக் மட்டுமின்றி ட்விட்டர் புளூ சந்தா வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு வருவதில் பாதி விளம்பரஙகள் மட்டுமே வழங்கப்படும். மேலும் இவர்களால் நீண்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோவை பதிவேற்ற முடியும்.

ட்விட்டர் புளூ சந்தா பலன்கள்:

புளூ கட்டணம் மாதம் 8 டாலர்கள்

ரிப்ளை, மென்ஷன் மற்றும் சர்ச்களில் முக்கியத்துவம்

நீண்ட வீடியோ, ஆடியோ பதிவேற்றும் வசதி

பாதி விளம்பரங்கள்

பப்லிஷர்களுக்கு பேவால் பைபாஸ் வசதி

புளூ அக்கவுண்ட் ஸ்பேம்/ஸ்கேம் செய்தால் அக்கவுண்ட் உடனடியாக நீக்கப்படும்

Tags:    

Similar News