அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 4 ஆயிரத்து 500 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ

Published On 2022-10-22 12:39 IST   |   Update On 2022-10-22 12:39:00 IST
  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டின் வருவாய் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர லாபம் 28 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஜியோ நிறுவனம் ரூ. 4 ஆயிரத்து 518 கோடி லாபம் ஈட்டியது. புதிய வாடிக்கையாளர்கள் இணைந்தது மற்றும் வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் அதிகரித்து உள்ளிட்டவை லாபம் அதிகரிக்க காரணங்களாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஜியோ லாபம் ரூ. 3 ஆயிரத்து 528 கோடியாக இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மூலம் கிடைக்கும் லாபம் 20.2 சதவீதம் அதிகரித்து ரூ. 22 ஆயிரத்து 521 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 18 ஆயிரத்து 735 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ மும்முரம் காட்டி வரும் நிலையில், இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய தலைமுறை தொழில்நுட்பம் அதிவேக இணைய வசதி, சீரான இணைப்பு கொண்டிருக்கும். உலகளவில் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. முதலிடத்தில் சீனா இருக்கிறது.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 4 ஆயிரத்து 729 கோடியாக அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டு வாக்கில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் லாபம் ரூ. 3 ஆயிரத்து 728 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜியோ பிளாட்பார்ம்ஸ் வருவாய் 22.7 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 24 ஆயிரத்து 275 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இது ரூ. 19 ஆயிரத்து 777 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News