அறிந்து கொள்ளுங்கள்

ஒப்போ ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி லீக்கானது

Published On 2022-06-28 10:30 GMT   |   Update On 2022-06-28 10:30 GMT
  • 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
  • ரெனோ 8 ப்ரோ பிளஸ் மாடல் இந்தியாவில் ரெனோ 8 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி லீக் ஆகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது. மேலும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் மாடல் இந்தியாவில் ரெனோ 8 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


வெண்ணிலா ரெனோ 8 ஸ்மார்ட்போன், 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் டைமென்சிட்டி 1300 SoC புராசசரைக் கொண்டுள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. பின்புறத்தில் 50MP + 2MP + 2MP என டிரிபிள் கேமரா அமைப்பையும் முன்பக்கத்தில் 32MP கேமராவையும் கொண்டுள்ளது.

Tags:    

Similar News