அறிந்து கொள்ளுங்கள்
1 ரூபாய்க்கு சிம் கார்டு - தீபாவளியை ஒட்டி பல்வேறு சலுகைகளை அள்ளிக்கொடுத்த BSNL
- அண்மையில் நாடு தழுவிய அளவில் BSNL நிறுவனத்தில்'4G' சேவை தொடங்கபட்டது.
- தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் அண்மையில் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கியது.
இதனையடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினர். இந்நிலையில், தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.1 செலுத்தி புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை பெறலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும் என்றும் நவம்பர் 15 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.