மொபைல்ஸ்

மோட்டோ ஜி71 மாடல் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைப்பு

Published On 2022-07-15 14:45 IST   |   Update On 2022-07-15 15:55:00 IST
  • மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் நெப்டியூன் கிரீன் மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி71 என்கிற 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது மோட்டோ நிறுவனம்.

அதன்படி ரூ.19 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த மோட்டோவின் ஜி71 ஸ்மார்ட்போனின் விலை ரூ.4 ஆயிரம் குறைக்கப்பட்டு தற்போது ரூ.15 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர எஸ்.பி.ஐ கிரெடிட் கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு மேலும் ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


அம்சங்களை பொருத்தவரை இதில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 13 5ஜி பேண்ட்களுக்கான சப்போர்ட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் டர்போசார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் நெப்டியூன் கிரீன் மற்றும் ஆர்க்டிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

Tags:    

Similar News