அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 19 விலையில் புதிய சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

Published On 2023-07-11 03:47 GMT   |   Update On 2023-07-11 03:47 GMT
  • ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது.
  • டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 19 மற்றும் ரூ. 29 விலையில் கிடைக்கும் இரு சலுகைகளும் பயனர்களுக்கு கூடுதல் டேட்டாவினை வழங்குகிறது. இவை முறையே 1.5 ஜிபி மற்றும் 2.5 ஜிபி டேட்டா வழங்குகின்றன.

இரு சலுகைகளுக்கும் எவ்வித வேலிடிட்டியும் இல்லை. எனினும், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகை நிறைவடையும் போது, இதற்கான வேலிடிட்டி நிறைவுக்கு வந்துவிடும். இந்த ஆட்-ஆன் டேட்டா பேக் சலுகையில் கிடைக்கும் டேட்டா, ஏற்கனவே உள்ள சலுகையில் வழங்கப்படும் டேட்டா தீர்ந்தால் தான் பயன்படுத்தப்படும்.

 

ஒரே அக்கவுன்டில் பல்வேறு ஆட்-ஆன் சலுகைகளை சேர்த்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவற்றை ரிசார்ஜ் செய்த வரிசையில் தான் பயன்படுத்த முடியும். முதலில் ரிசார்ஜ் செய்த வவுச்சர் தீர்ந்த பிறகு தான், அடுத்த வவுச்சரை பயன்படுத்தலாம். டேட்டா ஆட்-ஆன் சலுகையில் கிடைக்கும் டேட்டா தீர்ந்த பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.

புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இரண்டு சலுகைகள் தவிர ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே ரூ. 15, ரூ. 25, ரூ. 61, ரூ. 222 மற்றும் ரூ. 121 விலைகளில் ஆட்-ஆன் சலுகைகளை வழங்கி வருகிறது. இவற்றில் முறையே 1 ஜிபி, 2 ஜிபி, 6 ஜிபி, 50 ஜிபி மற்றும் 12 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகலும் ஜியோ வலைதளம் மற்றும் ஜியோ செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News