ஆட்டோ டிப்ஸ்

சென்னை போர்டு ஆலையில் உற்பத்தியான கடைசி கார்

Published On 2022-07-21 07:08 GMT   |   Update On 2022-07-21 07:09 GMT
  • போர்டு நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் சனந்த் ஆலை பணிகளை போர்டு நிறுத்தியது.

போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து கடைசி கார் போர்டு இகோஸ்போர்ட் வெளியிடப்பட்டது. இந்த மாடல் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் யூனிட் ஆகும். இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதாக போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது.


இதைத் தொடர்ந்து போர்டு நிறுவனம் உற்பத்தி பணிகளை மெல்ல நிறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் போர்டு சனந்த் ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த ஆலையில் இருந்து ஃபிரீஸ்டைல் மாடல் கடைசி யூனிட்-ஆக வெளியிடப்பட்டது. சென்னை ஆலை மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வந்தது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த மாடல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் மீண்டும் பணிகளை தொடங்குவது பற்றி போர்டு நிறுவனம் இதுவரை எந்த திட்டமும் கொண்டிருக்கவில்லை. போர்டு நிறுவனம் தனது சனந்த் ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை ஆலையும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News