அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் 5ஜி சேவை - முதலில் எங்கு வெளியாகுது தெரியுமா?

Published On 2022-09-28 07:09 GMT   |   Update On 2022-09-28 07:09 GMT
  • இந்தியாவில் அடுத்த தலைமுறை டெலிகாம் சேவையான 5ஜி விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
  • இந்தியாவில் முதன் முதலில் 5ஜி சேவை எங்கு வெளியிடப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை முதற்கட்டமாக புதுடெல்லியில் வழங்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியன் மொபைல் காங்கிரஸ் நிகழ்வை துவக்கி வைக்கிறார். மேலும் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகளை துவங்கி வைக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவதால் 5ஜி நெட்வொர்க் முதற்கட்டமாக டெல்லியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 5ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டதும் வர்த்தக பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்காது என்றே தெரிகிறது. எனினும், 5ஜி வெளியீடு பற்றி டெலிகாம் நிறுவனங்களின் அறிவிப்பு மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்திய டெலிகாம் சந்தையில் டெல்லி மிக முக்கிய வட்டாரமாக விளங்குகிறது.

5ஜி நெட்வொர்க் சப்போர்ட் கொண்ட சாதனங்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் 5ஜி நெட்வொர்க் சேவையை இயக்க முடியும். இந்த பண்டிகை காலக்கட்டத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை அடுத்து பலரும் 5ஜி சாதனங்களுக்கு அப்கிரேடு செய்ய துவங்கி உள்ளனர்.  

Tags:    

Similar News