மொபைல்ஸ்

ஸ்மார்ட்போன்கள் விலையை அதிரடியாக குறைத்த விவோ - ஏன் தெரியுமா?

Published On 2023-09-02 09:52 GMT   |   Update On 2023-09-02 09:52 GMT
  • இரண்டு விவோ ஸ்மார்ட்போன்களும் ஒற்றை மெமரி வேரியண்டில் கிடைக்கிறது.
  • விவோ Y36 மாடலுக்கு வங்கி சார்ந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது. விவோ Y36 மற்றும் Y02t மாடல்களுக்கு திடீரென விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இரு மாடல்கள் விலையும் தற்போது முறையே ரூ. 1000 மற்றும் ரூ. 500 குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் விவோ Y36 மாடலை வாங்குவோருக்கு ரூ. 1000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

புதிய விலை விவரங்கள்:

விவோ Y36 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இந்த மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ. 1000 விலை குறைப்பை தொடர்ந்து இந்த மாடலின் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.

 

இத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ. கார்டு, ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட், ஃபெடரல் வங்கி, எஸ் (YES) வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்டவைகளின் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் பெறலாம். இதுதவிர வி ப்ரோடெக்ஷன் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

விவோ Y02t மாடலும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் விலை முன்னதாக ரூ. 9 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது ரூ. 9 ஆயிரத்து 499 என்று மாறி இருக்கிறது.

எனினும், இந்த மாடலை வாங்குவோருக்கு வங்கி சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இரு மால்களின் விற்பனையும் ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News