3nm பிராசஸருடன் சர்வதேச சந்தையில் அறிமுகமான விவோ X300 சீரிஸ்
- இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5,440mAh பேட்டரி கொண்டுள்ளது.
- விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது.
விவோ X300 ப்ரோ மற்றும் விவோX300 ஆகியவை உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. சீனாவில் விவோX300 சீரிஸ் அறிமுகமான இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முதன்மையான 3nm ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் கொண்டிருக்கின்றன.
மேலும், விவோX300 ப்ரோ மற்றும் விவோ X300 ஸ்மார்ட்போன்கள் மூன்று பின்புற கேமரா சென்சார்களை கொண்டுள்ளன. முன்பக்கத்தில், இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 50MP செல்ஃபி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, விவோ X300 சீரிஸ் டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
விவோ X300 ப்ரோ அம்சங்கள்:
விவோX300 ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. இது 6.78-இன்ச் 1,260×2,800 பிக்சல் ஃபிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப், மாலி G1-அல்ட்ரா GPU உடன் வருகிறது. மேலும், 16 ஜிபி LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512 ஜிபி UFS 4.1 மெமரியுடன் கிடைக்கும்.
புகைப்படங்களை எடுக்க விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP (f/1.57) பிரைமரி கேமரா, 50MP (f/2.0) அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 200MP (f/2.67) பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50MP (f/2.0) செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
சென்சார்களை பொருத்தவரை 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார், ஹால் எஃபெக்ட் சென்சார், ஐஆர் பிளாஸ்டர், ஃப்ளிக்கர் சென்சார் மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார் ஆகியவை அடங்கும். கனெக்டிவிட்டிக்கு வைஃபை 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5,440mAh பேட்டரி கொண்டுள்ளது. விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 சான்று பெற்றுள்ளது.
விவோ X300 அம்சங்கள்:
விவோX300 ஸ்மார்ட்போனிலும், ப்ரோ வேரியண்ட்டில் உள்ள அதே பிராசஸர், ஓஎஸ், கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனினும், இது சிறிய 6.31-இன்ச் 1,216×2,640 பிக்சல் ஃபிளாட் Q10+ LTPO AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேலும், விவோX300 ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக, இது 5,360mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புகைப்படம் எடுக்க விவோ X300 மாடலில் OIS உடன் 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ப்ரோ மற்றும் ஸ்டாண்டர்ட் மாடல்கள் இரண்டும் ஒரே செல்ஃபி கேமராவுடன் வருகின்றன.
விவோ X300 சீரிஸ் விலை விவரங்கள்:
புதிய விவோ X300 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரியுடன் கூடிய ஒரே வேரியண்ட் விலை யூரோக்கள் 1,399 (இந்திய மதிப்பில் ரூ. 1,43,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவோ X300 விலை 1,049 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,08,000) இல் இருந்து தொடங்குகிறது.
விவோ X300 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் நவம்பர் 3ஆம் தேதி ஐரோப்பாவில் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும். விவோ X300 ப்ரோ டியூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது. விவோ X300 ஸ்மார்ட்போன் ஹாலோ பிங்க் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.