வெளியீட்டுக்கு ரெடியான புது விவோ ஸ்மார்ட்போன்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா?
- விவோ X200 FE-யின் வலது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இருப்பது போல் தெரிகிறது.
- நான்கு வண்ணங்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய விவோ X200 FE விரைவில் சர்வதேச சந்தைகளில் அறிமுகமாக உள்ளது. நிறுவனம் சமீபத்தில் அதன் மலேசிய வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவை தொடங்கியது. மேலும் அதன் வெளியீட்டு தேதியை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. விவோ X200 FE இன்று முதல் ஒரு வாரத்திற்குள் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மர்ட்போன் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் உட்பட நான்கு நிறங்களில் விற்பனை செய்யப்படும். விவோ X200 FE கேமரா சென்சார்கள் மாத்திரை வடிவில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள அலகில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் செல்ஃபி கேமராவிற்கு ஒரு பஞ்ச்-ஹோல் கட்-அவுட் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
விவோ X200 FE வெளியீட்டு தேதி, வண்ண விருப்பங்கள்
விவோ நிறுவனத்தின் தைவான் பிரிவு, விவோ X200 FE அறிமுகத்திற்காக ஒரு மைக்ரோசைட்டை உருவாக்கி இருக்கிறது. இந்த போன் வருகிற 23-ந்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துவதோடு, "விரைவில் வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டீசர் படங்களில், விவோ X200 FE பின்புறத்தில் Zeiss-பிராண்டட் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களுடன் காணப்படுகிறது, இரண்டு கேமரா சென்சார்கள் ஒற்றை மாத்திரை வடிவ யூனிட்டில் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வளைய வடிவ LED ஃபிளாஷுக்கு மேலே ஒரு தனித்துவமான மூன்றாவது லென்ஸும் உள்ளது.
விவோ X200 FE-யின் வலது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இருப்பது போல் தெரிகிறது. அதன் முன்பக்கத்தில் மெல்லிய பெசல்கள் மற்றும் முன்பக்க கேமராவிற்கான மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்-அவுட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ S30 ப்ரோ மினியுடன் பலவிதங்களில் ஒற்றுப்போகிறது. அதன்படி புதிய விவோ X200 FE அந்த ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
விவோ நிறுவனம் வரவிருக்கும் இந்த போனை கருப்பு, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் என மொத்தம் நான்கு வண்ணங்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
விவோ X200 FE அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இன்னும் ரகசியமாகவே இருந்தாலும், மலேசிய இணையதளத்தில் சமீபத்தில் வெளியான விவோ X200 FE, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9300+ சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.