மொபைல்ஸ்

விவோ ஸ்மார்ட்போனிற்கு வேற லெவல் சலுகை அறிவித்த ப்ளிப்கார்ட்

Published On 2024-02-13 12:22 GMT   |   Update On 2024-02-13 12:22 GMT
  • 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட பிராசஸர் உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

விவோ நிறுவனத்தின் X100 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் விவோ X100 மற்றும் X100 ப்ரோ என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 63 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டன. தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 


எனினும், இந்த தள்ளுபடி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது மட்டுமே கிடைக்கும். இதுதவிர வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் மூலம் விவோ X100 மாடலின் இரண்டு வேரியன்ட்களின் விலை முறையே ரூ. 58 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 64 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

இந்த சலுகை பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

Tags:    

Similar News