மொபைல்ஸ்

புது போல்டபில் போன் டீசர் வெளியிட்ட விவோ

Update: 2022-09-20 11:30 GMT
  • விவோ நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகி உள்ளது.
  • இந்த போல்டபில் ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே விவோ X போல்டு 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிலையில், விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை விவோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி மாடல் டீசரை விவோ நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

 

இத்துடன் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டிங்கில் சக்திவாய்ந்த கேமரா கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட மற்றும் அதிக உறுதியான ஹின்ஜ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள ஹின்ஜ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது. பரிசோதனையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று லட்சம் முறை மடிக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) துவங்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News