மொபைல்ஸ்

6500mAh பேட்டரி, 200MP கேமராவுடன் வெளியீட்டுக்கு ரெடியாகும் விவோ ஸ்மார்ட்போன்

Published On 2025-10-01 15:14 IST   |   Update On 2025-10-01 15:14:00 IST
  • ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
  • 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விவோ V60e ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், அதன் சில சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது.

அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கும். இதில் 200MP பிரைமரி சென்சார், OIS வழங்கப்பட்டுள்ளது. விவோ வி60இ ஸ்மார்ட்போன், AI ஃபெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தை அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

விவோ V60e அம்சங்கள்:

விவோ இந்தியா வலைத்தளத்தில் உள்ள ஒரு மைக்ரோசைட் புதிய, விவோ V60e ஸ்மார்ட்போன்: எலைட் பர்பிள் மற்றும் நோபல் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 + IP69 சான்றுகளுடன் வரும். இந்த ஸ்மார்ட்போனில் குறைந்தபட்ச பெசல்களுடன் கூடிய குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோ V60e ஸ்மார்ட்போனில் மூன்று ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று விவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கேமராவை பொறுத்தவரை, விவோ V60e ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியுடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகும்.

Tags:    

Similar News