மொபைல்ஸ்

12 ஜி.பி. ரேம் கொண்ட புது விவோ ஸ்மார்ட்போன்.. வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-11-22 08:41 GMT   |   Update On 2023-11-22 08:41 GMT
  • விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம்.
  • V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தகவல்.

விவோ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தான் விவோ V30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி விவோ V30 லைட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ்., 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, என்.எஃப்.சி., ப்ளூடூத் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விவோ V30 லைட் மாடல் V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. எனினும், இதன் ஹார்டுவேரில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.

சர்வதேச சந்தையில் விவோ V29e மாடல் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய விவோ V30 மற்றும் விவோ V30 லைட் மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

Tags:    

Similar News