மொபைல்ஸ்

மிட் ரேன்ஜ் பிரிவில் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2022-08-22 09:46 IST   |   Update On 2022-08-22 09:46:00 IST
  • விடவோ நிறுவனம் தொடர்ச்சியாக Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.
  • இதன் புதிய Y22s மாடல் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

விவோ நிறுவனம் தனது பிரபலமான Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை பல்வேறு உலக நாடுகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது Y22s ஸ்மார்ட்போன் மாடலை வியட்நாமில் அறிமுகம் செய்து இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.


விவோ Y22s அம்சங்கள்:

- 6.55 இன்ச் 2408x1080 பிக்சல் HD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்

- அடிரினோ 610 GPU

- 8 ஜிபி ரேம்

- 128ஜிபி மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஓஎஸ் 12

- டூயல் சிம்

- 50MP பிரைமரி கேமரா

- 2MP மேக்ரோ கேமரா

- 8MP செல்பி கேமரா

- பக்கவாட்டில் கைரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5

- யுஎஸ்பி டைப் சி

- 5000 எம்ஏஹெச் பேட்டரி

- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

புதிய விவோ Y22s ஸ்மார்ட்போன் ஸ்டார்லிட் புளூ மற்றும் சம்மர் சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 455 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News