மொபைல்ஸ்

6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது டெக்னோ போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2022-09-24 04:11 GMT   |   Update On 2022-09-24 04:11 GMT
  • டெக்னோ பிராண்டின் புது ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • புதிய டெக்னோ போன் 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய டெக்னோ போவா நியோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.8 இன்ச் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் மெமரி பியுஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது கேமரா, 8MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6 கொண்டிருக்கும் டெக்னோ போவா நியோ 5ஜி மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 டெக்னோ போவா நியோ 5ஜி அம்சங்கள்:

6.8 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்

மாலி G57 MC2 GPU

4 ஜிபி ரேம்

128 ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6

டூயல் சிம் ஸ்லாட்

50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்

இரண்டாவது கேமரா

8MP செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

யுஎஸ்பி டைப் சி

6000 எம்ஏஹெச் பேட்டரி

18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

டெக்னோ போவா நியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்ப்ரிண்ட் புளூ மற்றும் சபையர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 26 ஆம் தேதி சில்லறை விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.

Tags:    

Similar News