மொபைல்ஸ்

எல்லாரும் வாங்கலாம்.. குறைந்த விலை ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் உருவாக்கும் சாம்சங்

Published On 2023-11-10 10:27 GMT   |   Update On 2023-11-10 10:27 GMT
  • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
  • மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கிய முதல் முன்னணி நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுவரை ஐந்து தலைமுறை கேலக்ஸி Z ஃபோல்டு ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு முதல் சாம்சங் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேபோன்று சாம்சங் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனமும் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரென்ட்ஃபோர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஃபேன் எடிஷனை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்பட்டது. கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களின் ஃபேன் எடிஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News