மொபைல்ஸ்

அடுத்த வாரம் இந்தியா வரும் சாம்சங் M சீரிஸ் ஸ்மார்ட்போன்

Published On 2023-04-13 13:43 IST   |   Update On 2023-04-13 13:43:00 IST
  • அமேசான் மைக்ரோசைட்டில் புதிய கேலக்ஸி M14 அம்சங்கள் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 13 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M14 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் SIRIM வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் அமேசான் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

அமேசான் மைக்ரோசைட்டில் புதிய கேலக்ஸி M14 அம்சங்கள் பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 13 வித்தியாசமான 5ஜி பேண்ட்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

 

இத்துடன் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி F14 5ஜி மாடலை தொடர்ந்து இந்த பிரிவில் எக்சைனோஸ் 1330 பிராசஸர் கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கேலக்ஸி M14 பெற்று இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமராவுடன், மூன்று லென்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

புதிய சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 155 மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக், 58 மணி நேரத்திற்கு டாக்டைம், 27 மணி நேரத்திற்கு இணைய பயன்பாடு, 25 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்குகிறது.

அமேசான் வலைதளத்தில் உள்ள மைக்ரோசைட்டில் புதிய சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போனின் டிசைன் பற்றிய விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய மாடலில் நாட்ச் டிஸ்ப்ளே, பிளாஸ்டிக் பேக் பேனல், வட்ட வடிவம் கொண்ட மூன்று கேமரா பம்ப்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி A14 போன்றே காட்சியளிக்கிறது.

விலையை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,xxx என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், சாம்சங் கேலக்ஸி M14 விலை ரூ. 13 ஆயிரத்து 499 அல்லது ரூ. 13 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News